கல்லூரி மாணவன் தற்கொலை! வெளியூரில் படிக்க அனுமதிக்காததால் ஆத்திரம்!

 
தற்கொலை

வெளியூருக்கு சென்று பொறியியல் கல்லூரியில் படிக்க தாய் அனுமதிக்காததால், மன அழுத்தத்தில் இருந்த மாணவர், விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆரல்வாய்மொழி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே திருமலைபுரம் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி விண்ணரசி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களில் 2வது மகன் எபிராஜ் (18) பிளஸ்டூ முடித்து விட்டு அதே பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

வெளிநாட்டில் இருக்கும் தந்தை ராஜேந்திரனிடம் மகன் எபிராஜ், வெளியூர் சென்று பொறியியல் படிக்க அனுமதி கேட்டார். ஆனால் தாய் விண்ணரசி, மகன் வெளியூருக்குச் சென்று படிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் விரக்தியடைந்த எபிராஜ் வடீடில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

இதை பாரத்து அதிர்ச்சியடைந்த தாய் கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற போலீசார் எபிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web