ரிஷப் பண்ட் திரும்ப வா.. கோயிலில் இந்திய வீரர்கள் சிறப்பு பூஜை !!

 
pant

இந்தியா வந்துள்ளா நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 
இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இந்தூர் வந்துள்ளனர்.

pant

இந்தூர் வந்த இந்திய அணி வீரர்கள் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவை தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது. 

அதன் பிறகு ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் சூர்யகுமார் யாதவ், நாங்கள் ரிஷப் பண்டிற்காக இங்கு வந்து பிரார்த்தனை செய்தோம். அவர் திரும்ப வருவது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று கூறியுள்ளார்.

கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். 

From around the web