வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது சங்கு வளையல்கள், செப்பு காசு..!!

வெம்பக்கோட்டையில்  நடைபெற்று  வரும்  அகழ்வாராய்ச்சியில்  சுடும்  மண்ணால்  ஆன  முத்திரை, சங்கு வளையல்கள்,  செப்பு காசு  கண்டறியப்பட்டுள்ளது.

 
வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் உள்ள வைப்பாற்று கரையில் விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் முன்னதாக சுடுமண்ணால் ஆன பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், கோடாரி, சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள், தங்க அணிகலன்கள்,பொம்மமை உருவம் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இந்த பகுதியில் சுமார் 15 குழிகள் தோண்டபட்டுள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து இன்று பழங்காலத்தில் பண்டைய கால மக்கள் கலை ஆர்வத்தை அறிந்து கொள்ளும் வகையில் நுனுக்கமான வேலைப்பாடுகள் அடங்கிய சுடு மண்ணால் செய்யப்பட்ட முத்திரையிடும் கருவி உலோகத்தினர் ஆன உருவம் பதித்த காசுகள் அழகிய வேலைப்பாடுடன் கூடிய உலோகத்தினால் ஆன முழுமையான வளையல்கள்  என பல்வேறு கலைநயமிக்க பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது கல்வாராய்ச்சி மேற்கொள்ளும் பணியாளர்களுடைய பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.   இங்கு நடக்கும் அகழாய்வு பணியின் போது பல்வேறு அரிய பொருட்கள் கிடைக்க பெற்று வருகின்றன.

இதன் மூலம் இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் கலைநயம் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது. இந்தக் பொருட்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குட்பட்ட பொருளாக இருக்குமா என்பது குறித்து என  தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்தடுத்து பல கலைநயம் மிக்க பொருட்கள் இப்பகுதியில் கண்டறியப் படுவது இப்பகுதியில் இப்பகுதியின் கலைத்திறன் மற்றும் தொன்மையையும் அறிய முடிகிறது என்று இப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்  

From around the web