ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்… மர்ம கடிதத்தால் பரபரப்பு…

 
ராகுல் காந்தி

ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மத்தியப்பிரதேசத்தில் மர்ம நபர்கள் எழுதிய கடித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைபயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஷெகானில் நடைபெற்று வருகிறது. சாவர்கருக்கு குறித்து கருத்து தெரிவித்ததாக கூறி ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் ஷேகானில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மிரட்டல்

இதனிடையே மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கிடைத்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் ராகுல்காந்தி வெடிகுண்டு வைத்து கொல்லப்படுவார் என மிரட்டல் விடுத்து எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராகுல் காந்தி

மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து ராகுல்காந்திக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியையும் பதற்றத்தையும்  ஏற்படுத்தி உள்ளது

From around the web