தொடரும் சாதிய வன்கொடுமை… ஈரோட்டில் பட்டியலின மாணவர்கள் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம்…

 
சாதிய வன்கொடுமை

 

தமிழகத்தில் சாதிய பாகுபாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தாலும்  இன்றளவும் சாதிய பாகுபாடு ஆங்காங்கே நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. மாணவ மாணவிகளுக்கு பாடம் மட்டுமின்றி   ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் கற்று தர வேண்டிய பள்ளி தலைமை ஆசிரியையே பட்டியலின மாணவர்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த அவலம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.    

சாதிய வன்கொடுமை

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 32 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை கீதா பள்ளியிலுள்ள கழிவறைகளை, அங்கே படிக்கும் பட்டியலின மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்ய வைத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாணவ மாணவியின் பெற்றோர் பெருந்துறை காவல்துறையினர் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

சாதிய வன்கொடுமை

அதைத் தொடர்ந்து பவானி, சென்னிமலை, பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் பள்ளி  தலைமை ஆசிரியை கீதாராணி மீது வன்கொடுமை தடுப்பு பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போலிசார் வழக்கு பதிவு செய்தனர்.   அதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் கற்று தர வேண்டிய   ஆசிரியையே  மாணவர்களை கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

From around the web