தொடரும் கனமழை!! 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த மழை மேலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கனமழை எதிரொலி!! 23 மாவட்டங்களில் விடுமுறை !!
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி  தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், கொடைக்கானல் மற்றும் சிறுமலையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

நீலகிரி மாவட்டத்திலும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி, கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதே போல் கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  பொதுத்தேர்வு  உள்ள மாணவர்களுக்கு வழக்கம் போல் செயல்படும் எனவும் கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web