தொடர் மழை.. கிடுகிடுவென உயர்ந்தது வெங்காயம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
வெங்காயம் காய்கறி கடை கோயம்பேடு சந்தை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தீவிரமாகியுள்ளதால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கடந்த வாரத்தில் இருந்தே கனமழை நீடிக்கிறது. புதியதாக இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழையால் காய்கறித் தோட்டங்கள் மற்றும் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி, குளம் குட்டை போல காட்சியளிக்கின்றன. இப்படி தேங்கி நிற்கும் வெள்ள நீரில், பயிர்கள் அனைத்தும் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால், சந்தைக்கான  வெங்காய வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அதிகளவு வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், நாமக்கல், அரியலுார், மதுரை பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து சந்தைக்கு விற்பனைக்கு வரும் வெங்காயத்தின் அளவு தற்போதே மிகக் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

வெங்காயம்

இதனால், சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. தீபாவளி வாரத்தில் கிலோ 45 முதல் 50 ரூபாய்க்குள் இருந்த சின்ன வெங்காயத்தின் விலை, நேற்று காலை கிலோ 80 ரூபாயை எட்டியது. திண்டுக்கல், மதுரை மொத்த வியாபார சந்தையில் முதல் தர சின்ன வெங்காயத்தின் விலை இது. அதே நேரத்தில், காய்ந்த வெங்காயம் மொத்த விற்பனை விலையில் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் செய்வதறியாது திகைக்கிறார்கள் இல்லத்தரசிகள்.

வெங்காயம் கிலோ 65 ரூபாய்க்கும், ஒன்றரைக் கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் பெல்லாரி வெங்காயம் விலை கொஞ்சம் உயர்ந்துள்ளது. முதல் தர பெல்லாரி வெங்காயம் இரண்டரை அல்லது 3 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சின்ன வெங்காயத்தின் அளவை குறைத்துக் கொண்டு, பொதுமக்கள் பெரிய வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

இன்னும் 10 நாட்களுக்கு காய்கறி தட்டுப்பாடு இருக்கும்: மக்களே உஷார்..!!

சின்ன வெங்காயம் மீதான விலை உயர்வு, டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என்றும், தைப் பொங்கல் சீசனில் புதிய வெங்காயம் சந்தைக்கு வரும் போது தான் இனி விலை குறையும் வாய்ப்பு உள்ளது என்றும் வெங்காய மொத்த வியாபாரிகள் சற்றே ஆறுதல் தெரிவிக்கிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web