ரூ3 லட்சத்திற்கு கள்ளநோட்டுக்கள்!! இளைஞர்களை தட்டி தூக்கிய காவல்துறை!!

 
கள்ளநோட்டு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் மோட்டார் சைக்கிள் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

தென்காசி மக்களுக்கு குட்நியூஸ்!! உடனே முந்துங்க!! இன்று மிகப்பெரிய வாய்ப்பு!!

போலீசார் கேட்ட கேள்விகளுக்கு 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், போலீசாரின் சந்தேகம் வலுத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் கள்ள நோட்டு கட்டுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில், ரூ..3 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சித்தது தெரிய வந்தது. இருவரையும் அதிரடியாக கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்ச கள்ள நோட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி? இவர்களின் பின்னணியில் யார்யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது

பொதுமக்கள் அதிகம் நடமாடும் தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் புழக்கத்தில் ஈடுபடுத்தப்பட மேற்கொண்ட முயற்சிகள் போலீசாரால் முறியடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web