ரூ.20 லட்சம் கேட்டு தம்பதி கடத்தல்.. நள்ளிரவில் காரில் பகீர் சம்பவம் !

 
சந்திரா

ரூ.20 லட்சம் கேட்டு தம்பதியை கடத்திய கும்பலை போலீசார் விரட்டிச்சென்றபோது தப்பியோடினர். எனினும் ஒருவர் சிக்கினார்.  

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கண்ணுடையான்பட்டியில் பழனியப்பன்(55)- சந்திரா(43) தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களது மகன் கலைச்செல்வனுக்கு(33) சென்னை அருகே பொன்னேரியில் நிலம் வாங்குவதற்காக நேற்றுமுன்தினம் மாலை தம்பதியர் மணப்பாறையில் இருந்து காரில் புறப்பட்டனர். இவர்களின் கார் சமயபுரம் அருகே சென்றபோது சிலர் காரை வழிமறித்து நிறுத்தினர். பின்னர், பழனியப்பனை மிரட்டி தங்கள் காரில் ஏற்றிசென்றனர். மேலும் அவரது மனைவி சந்திராவை அவரது காரிலேயே உட்கார வைத்து அதை இன்னொருவர் ஓட்டிச்சென்றார்.

சந்திரா

அப்போது அவர்களிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால், மணப்பாறையில் உள்ள தனது மகன் கலைச்செல்வனிடம் பணத்தை வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் வையம்பட்டி நோக்கி சென்றபோது, போலீசார் சாலையில் தணிக்கை பணியில் இருந்ததால் கரூர் மாவட்டம் தோகைமலை நோக்கி காரில் பறந்தனர்.

எனினும் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை விரட்டிச்சென்றனர். போலீசார் விரட்டுவதை அறிந்த அந்த கும்பல், நள்ளிரவு 12 மணியளவில் மணப்பாறை அருகே காரை நிறுத்தி தம்பதியிடமிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், 10 பவுன் நகையை பறித்து கொண்டு நடுவழியில் இறக்கி விட்டு தப்பிசென்றனர்.

சந்திரா

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதன்பேரில் முதல்கட்டமாக திருச்சி துவாக்குடியை சேர்ந்த காளிதாஸ் (53) என்பவரை கைது செய்தனர். தப்பிய  5 பேரை தேடி வருகின்றனர். காரில் தம்பதி கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web