அசத்தல்! தீபாவளிக்குள் சென்னையில் 5ஜி சேவை! முகேஷ் அம்பானியின் அறிவிப்பு!

 
முகேஷ் அம்பானி

வருகிற தீபாவளி பண்டிகைக்குள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை தொடங்கப்பட்டு விடும். அதற்காக ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் வாடிக்கையாளர்கள் இடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதில் உரை நிகழ்த்திய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ரிலையன்ஸ் நிறுவனம் ஏராளமான பங்களிப்பின் மூலம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருந்துள்ளது. அடுத்த தலைமையினருக்கு முந்தைய தலைமுறையினர் பயன்படுத்தி வந்த வசதிகளை விட அதிகமாக கிடைக்கும். உலகளவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல், மந்தநிலை, அழுத்தம் இருந்த போதிலும் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஏற்றுமதி 75 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.25 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. மேலும் ஏற்றுமதியில் 8.4 சதவீதம் ரிலையன்ஸ் நிறுவனத்தை சார்ந்தது. கடந்த ஆண்டு ஏற்றுமதி 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

5ஜி
நாடு முழுவதும் 2.32 லட்சம் வேலைவாய்ப்புகளை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் நாட்டிலேயே ரூ.1.55 லட்சம் கோடி வரியாக செலுத்துவதன் மூலம் அதிகமான வரி செலுத்தும் பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய மற்றும் அதிவேகமுள்ள 5ஜி சேவை தொடங்கப்படும் என்று கூறினார்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வருகிற தீபாவளி பண்டிகைககுள் 5ஜி சேவை தொடங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நாட்டின் அனைத்து பகுதிக்கும் 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டு அடுத்த 18 மாதங்களுக்குள் நாட்டின் ஒவ்வொரு தாலுகா மற்றும் நகரங்களில் ரிலையன்ஸ் 5ஜி சேவை தொடங்கப்பட்டு விடும். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அல்ட்ரா மொபைல் போன் தயாரிப்பில் மக்கள் வாங்கும் வகையில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறோம்.

மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், எரிக்சன், பேஸ்புக் ஆகிய நிறுவனங்களின் இணைந்து மேட்இன் இந்தியா 5ஜி கூட்டுறவில் பணியாற்றியது. அடுத்தபடியாக குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற இருக்கிறது.

இந்தியாவில்  5ஜி சேவை தொடக்கம்!!

421 மில்லியன் மொபைல் பிராடுபேண்டு சந்தாதாரர்களைக் கொண்டு 4ஜி நெட்வொர்க்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கனவே முன்னணியில் உள்ளது. நாட்டின் இன்டர்நெட் பிராட்பேண்டு சேவை மூலம்  நாட்டில் 10 கோடி வீடுகளுக்கு அதிகவேக இன்டர்நெட் வழங்க திட்டமிட்டுள்ளது. 2023ம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு நகரத்திலும் ரிலையன்ஸ் 5ஜி சேவை கொண்டு வரப்படும்.

அதிவேக இணைய தளவசதி இனி ஜியோவின் 5ஜி அலர்ட் பைபர் சேவை மூலம் கிடைக்கும். இதற்கு எந்த விதமான வயர்களும் தேவைப்படாத இதற்கு ஜியோ ஏர்பைபர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வீடு, அலுவலகம் ஆகிவற்றை ஜிகாபைட் வேகத்தில் விரைவாக இணைக்கும் வசதி செய்யப்படும்.

சில்லரை வர்த்தக நிறுவனங்களில் டாப் 10&ல் ஆசியாவிலேயே ரிலையன்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மூலம் ஆண்டு வருவாய் ரூ.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி பெருமிதத்துடன் தெரிவித்தார். இதனால் 5ஜி வரவை நோக்கி மக்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

From around the web