கால்பந்து விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்… வைரலாகும் வீடியோ…

 
கால்பந்து

இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவும் , ஒருநாள் ஆட்டத்துக்கு ஷிகர் தவானும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி வெல்லிங்டனில்  இன்று மதியம் 12 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை.

கிரிக்கெட் விராட் கோலி

இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்தியா- நியூசிலாந்து அணி வீரர்கள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

From around the web