தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளது!! டிஜிபி சைலேந்திரபாபு!!

 
டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு   குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். பின்னர் கோவை மாவட்டத்தில் குற்ற வழக்குகளை சிறப்பாக கையாண்ட தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஊக்க தொகைகள், சன்மானங்களையும்  வழங்கி பாராட்டினார்.

டிஜிபி சைலேந்திரபாபு

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, 'கோவை மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 15 காவல் நிலையங்கள் உள்ள நிலையில், முதல்வர் உத்தரவின் படி கோவை மாநகரில் சுந்தராபுரம், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆயத்தபணிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கூடுதல் காவல்துறையினர் பணியமர்த்தபடுவார்கள்'  தமிழகத்தில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது எனக்கூறலாம். கடந்த வருடத்தில் அக்டோபர் மாதம் 1597 கொலை குற்றங்கள் நிகழ்துள்ளது. இந்த ஆண்டு 1368 கொலை குற்றங்கள் நடந்த நிலையில் 15% கொலை குற்றங்கள் குறைந்துள்ளது. அதேபோன்று ஆதாயக்கொலைகள் 89 லிருந்து 79 ஆக குறைந்துள்ளது. கொள்ளை வழக்குகள் 111 லிருந்து 96 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பாலான குற்றங்களை காவல்துறையினர் சிறப்பாக பணியாற்றி கண்டறிந்துள்ளனர். இதேபோன்று சென்னை உள்பட அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் அதிகபடியான சிசிடிவி கேமராக்கள் அரசின் செலவிலேயே பொருத்தபட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் அடிப்படையில் வேலூர், தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அதிக சிசிவிடி கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.  

டிஜிபி சைலேந்திரபாபு

பெரிய குற்றங்களை கண்டறிய சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒரு புகைப்படம் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருள் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  கேரளாவிலிருந்து வரும் பயோ மெடிக்கல் வேஸ்ட் தமிழகத்தில் கொட்டுவதை தடுக்க தென்காசி, பொள்ளாச்சி, கன்னியாகுமரி உள்பட 6 இடங்களில் செக் போஸ்ட் அமைதது கண்காணித்து வருகிறோம். வெளிமாநில வாகனங்களை கண்காணிக்க முதல்வரின் உத்தரவுப்படி சுங்கச்சாவடிகளில் நவீன கோமராக்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்போது  இணையவழி குற்றங்கள் தான் அதிகமாகிவிட்டது, கடந்த நவம்பர் மாதம் வரை 45 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளது. வெளிநாட்டில் இருக்கும் நபர், டி.ஜி.பி பெயரை கூறியே 7.5 இலட்சம் ஏமாற்றியுள்ளார். மின்பயனீட்டாளர் எண்ணில் ஆதார் எண்ணை இணைத்து தருவதாக கூறி, படித்த அதிகாரியையே ஏமாற்றியுள்ளனர். நெட் பேங்கிங் வேலை செய்ய வேண்டுமென்றால் பேன் கார்டு இணைக்க சொல்லி ஏமாற்றுதல்,  லோன் கொடுப்பது போன்று ஏமாற்றுதல், போட்டா மார்பிங் செய்து அதிக வட்டியில் பணத்தை கட்ட சொல்லி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புகைப்படம் அனுப்பும் குற்றம் உள்ளிட்டவைகள் அதிகரித்து விட்டது. இதுகுறித்து   காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. என்று அவர் கூறினார்.

From around the web