குவிந்த ரசிகர்கள்!! வீட்டு பணிப்பெண் இல்லத் திருமண விழாவில் சியான் விக்ரம்!!

 
விக்ரம்

1988-ம் ஆண்டு இயக்குநர் பாலசந்தர் இயக்கிய ‘கலாட்டா குடும்பம்’ என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகர் விக்ரம், தொடர்ந்து 1990-ம் ஆண்டு வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் 9 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த ‘சேது’ படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். 

விக்ரம்

அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, காசி, பிதாமகன், அந்நியன், போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர். 30ம் தேதி வெளியாக உள்ளது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம்

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வது வழக்கம்.

விக்ரம்

இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!