உணவை தாமதமாக டெலிவரி செய்த ஊழியரை ஆரத்தி எடுத்து வரவேற்ற வாடிக்கையாளர்!!

 
ஆரத்தி எடுத்து வினோதம்

சென்னையில் மட்டுமல்லாது தற்போது எல்லா இடங்களிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவது, மற்றும் துணிகள், வீட்டு உபயோகப்பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் வாங்குவது  தொடர்கதையாக உள்ளது.  நேரம் மற்றும் இது அலைச்சலை குறைப்பதாக கூறும் பெரும்பாலானோர் இந்த ஆன்லைன் ஆடர் முறையை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்த  உணவு போக்குவரத்து, தவறான நிர்வாகம் அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் சில நேரத்தில் தாமதமாக டெலிவரி செய்யப்படுவது வாடிக்கையான விஷயமே. இதேபோன்றதொரு சம்பவம் டெல்லியிலும் நடந்துள்ளது.

டெல்லியில் ஒருவர் ஆன்லைனில்  உணவு ஆடர் செய்துள்ளார்  அவர் ஆடர் செய்த உணவு வீட்டிற்கு டெலிவரி செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது.  இதனால் ஆத்திரமடைந்த அவர் ஊழியரை திட்டாமல்  சற்று வித்தியாசமாக அவரை  ஆரத்தி எடுத்து வரவேற்று வணங்கினார். இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறதுஆன்லைனில் ஆர்டர் செய்தால் 30 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும்.

இந்த நிலையில், டெல்லியில் டெலிவரி செய்பவர் ஒரு மணி நேரம் தாமதமாக உணவை டெலிவரி செய்தார். அப்போது வீட்டின் கதவை திறந்த வாடிக்கையாளர், 'ஐயே ஆப்கா இன்டெசார் தா..' என்ற பாடலைப் பாடிய படியே கதவைத் திறந்துள்ளார். அத்துடன், டெலிவரி செய்த ஊழியருக்கு வீட்டு வாசலில் 'ஆரத்தி' எடுத்ததோடு மட்டுமல்லாமல் நெற்றியில் 'திலகமிட்டு' வரவேற்றார். மேலும், அந்த வாடிக்கையாளர் டெல்லியின் போக்குவரத்து நெரிசலில் கூட தனது உணவை டெலிவரி செய்ததற்காக நன்றி தெரிவித்தார்அந்த ஊழியரும் இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ பெரும் வைரலானது.

From around the web