அடடே…! அசத்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்….

 
கமல்

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது கட்சிக்காக கவர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் கட்சிக்காக சென்னையில் திருமண மண்டபம் கட்டி தருவேன் என்று உறுதி அளித்துள்ளார்.

கமல்

இதுகுறித்து அவர் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கென தனி திருமண மண்டபத்தை கட்டலாம் என நான் முடிவெடுத்துள்ளேன், சென்னையிலேயே இந்த திருமண மண்டபத்தை கட்டி தர என்னால் முடியும். இதுபோன்ற கட்சி கூட்டங்களை நாம் அங்கேயே நடத்திக் கொள்ளலாம்.

கமல்

தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளையும் இந்த மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம். விரைவில் திருமண மண்டபம் தொடர்பான ஆயத்த பணிகளை தொடங்குவோம் என்று பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கலலஹாசனின் இந்த அறிவிப்பு கட்சியினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web