அடடா சூப்பர்…!! ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கு பார்சல் சேவை.. புதிய திட்டம் அறிமுகம்…

 
பார்சல் சேவை

வீடுகளில் இருந்து ரயில் நிலையத்திற்கும், ரயில் நிலையத்திலிருந்து வீட்டுக்கும் பார்சல் சேவையை கொண்டுபோய் சேர்க்கும் பணியை ரயில்வேயுடன் அஞ்சல்துறை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே துறை மற்றும் அஞ்சல் துறை இணைந்து தொடங்க உள்ள புதிய பார்சல் சேவை குறித்த அறிமுகக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தொழில் வா்த்தக சபையில் நடைபெற்றது.

பார்சல் சேவை

ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.எல்.சத்யகுமார் தலைமையில் நடைப்பெற்ற இந்த கூட்டத்தில்    மேற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவா் சுமிதா அயோத்தி, தெற்கு ரயில்வே தலைமை வணிக மேலாளர் ஆா்.முருகராஜ், சேலம் ரயில்வே கோட்ட வணிகப் பிரிவு மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுதொடா்பாக, ரயில்வே வாரியத்தின் நிர்வாக  இயக்குனர் ஜி.வி.எல்.சத்யகுமார் செய்தியாளா்களிடம் கூறியாதவது, கடந்த பட்ஜெட் அறிவிப்பின்போது ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவை தொடங்கிட திட்டம் வகுக்கப்பட்டது. அந்த வகையில் சில மாதங்கள் முன்பாக சூரத் நகரில் இருந்து வாராணாசிக்கு ரயில்வே மற்றும் அஞ்சல் துறை இணைந்து புதிய பார்சல் சேவையை தொடங்கின. இந்த சேவையை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இரண்டு துறைகளை சோ்ந்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பார்சல் சேவை

தமிழ்நாட்டில் விரைவில் இந்த புதிய பார்சர் சேவையை அறிமுகப்படுத்தும் விதமாக கோவையில் உள்ள தொழிலதிபர்கள், நிறுவனங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் இடையே திட்டம் குறித்த அறிமுகக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.  இந்த புதிய பார்சல் சேவையில் விமானங்களின் மூலம் பார்சல் கொண்டு செல்வது போன்று மிகவும் பாதுகாப்பான வகையில் பொருள்கள் எடுத்துச் செல்லப்படும். புதிய பார்சல் சேவையில் வீடுகளில் இருந்து ரயில் நிலையத்துக்கு பார்சல்களை கொண்டு வருவது, ரயில் நிலையங்களில் இருந்து உரிய இடத்துக்கு பார்சல்களை கொண்டு சோ்ப்பது ஆகிய பணிகளை அஞ்சல் துறை மேற்கொள்கிறது. இடைப்பட்ட சேவையை ரயில்வே துறை மேற்கொள்கிறது. என்று கூறினார். இந்த புதிய பார்சல் சேவையால் பொதுமக்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web