ரஜினியை இயக்குகிறார் மகள் ஐஸ்வர்யா! இன்று பூஜையுடன் துவக்கம்!

 
ஐஸ்வர்யா ரஜினி

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில், சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை இன்று துவங்குகிறது. படத்திற்கு லால் சலாம் என பெயரிட்டுள்ளனர். 

2012-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய பிரபலமடைந்தன. இதனைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார். 

ரஜினி லால் சலாம்

இதன்பின் டாகுமெண்டரி மற்றும் ஆல்பம் என்று இயக்கி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரைப்படம் இயக்குகிறார். 

லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு ‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ளனர். 

ரஜினி செளந்தர்யா ஐஸ்வர்யா

இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ‘லால் சலாம்’ திரைப்படம் 2023-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெறுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web