டிசம்பர் 7 முதல் 29 வரை குளிர்கால கூட்டத்தொடர்!!

 
பாராளுமன்றம்

இந்திய பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி முதல் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெறும் என இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஜோஷி டுவிட்டரில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் மொத்தம் 17 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பாராளுமன்றம்

அமுத கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கூட்டத்தொடரில் விவாதங்கள் இருக்கலாம் எனவும், ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த கூட்டத்தொடரில் முதல் நாள், உறுப்பினர்களின் மறைவிற்காக இரங்கல் தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று பெருமளவு குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பாராளுமன்றம்

நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், பெரிய அளவில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவுமின்றி கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web