சீரழியும் இளைய தலைமுறை!! பள்ளி மாணவர்கள் பையில் ஆணுறை, சிகரெட், கர்ப்பத்தடை மாத்திரைகள்?!

 
போதை பொருட்கள்

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தன. நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் நேரடி வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மன அழுத்தம், கற்றலில் இடைவெளி என பல்வேறு காரணங்களால் மாணவர்களிடையே குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு முறைகள், கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் மாணவர்களின் அலட்டல், அலப்பறைகள் தொடர்ந்து வருகின்றன.

தற்போதைய கால கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அரசு போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் சில சமூக விரோதிகளால் அதனை முற்றிலும் ஒழிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள பள்ளியில், மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

போதைப்பொருட்கள்

 

பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மாணவர்கள் செல்போன் கொண்டு வருகிறார்களா? என்று சோதனை நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு, ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கூட்டமைப்பு உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பைகளை ஆசிரியர்கள் சோதனை செய்தனர்.

போதைப்பொருள்

இதில் சில மாணவர்களின் பைகளில் செல்போன்கள், சிகரெட்டுகள், ஆணுறைகள், லைட்டர்கள், போதைப்பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. இதுபோல் ஒரு மாணவியின் பையில் இருந்து ஆணுறை, வாய்வழி கருத்தடை மருந்துகள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்த மாணவியிடம் கேட்டபோது அவள் தனது நண்பர்கள் தனக்கு தெரியாமல் பையில் ஆணுறைகளை போட்டதாக கூறினார். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்த ஆசிரியர்கள், அவர்கள் தவறான வழியில் செல்வது பற்றி கூறினர்.  இதையடுத்து மாணவர்களை கவுன்சிலிங் அழைத்து செல்லும்படி ஆசிரியர்கள், பெற்றோருக்கு அறிவுறுத்தினர்.  பள்ளி  மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web