நாளை அக்டோபர் 25ம் தேதி வரை சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை!

 
இன்று முதல் சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை!

தென் மாவட்டங்களில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக இம்மாதம் 25ம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைப்பாதையில் ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் புயல், நாளை அக்டோபர் 25ம் தேதி கரையைக் கடக்கும் நிலையில், தீபாவளியன்றும் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 64 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது சதுரகிரி மலை. இந்த மலையில் வீற்றிருக்கும் சுந்தர மகாலிங்கம் கோவிலும் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினங்கள், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூசைகள் நடைபெறுவது வழக்கம். இந்நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள், சதுரகிரி மலையில் ஏறி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இன்று முதல் சதுரகிரி மலையேற அனுமதி! CONDITIONS APPLY!

இந்நிலையில், தற்போது விருதுநகர் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக, சதுரகிரி மலைப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டிருந்ததால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக  சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால். இதன் காரணமாக இந்த மாத பிரதோஷம், அமாவாசை தினங்களுக்கு சதுரகிரி மலையேற பக்கதர்களுக்கு நாளை 25ம் தேதி வரையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி.இங்கு சந்தன மகாலிங்கம்,  சுந்தரமகாலிங்கம் கோவில்கள் அமைந்துள்ளன. சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகை வனம் என்று போற்றப்படும் சதுரகிரி கோவிலுக்கு தமிழகத்திலிருந்து மட்டுமல்ல  இந்தியா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

சதுரகிரி

மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்களில் மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி சமயத்தில் திருவிழா கோலாகலமாக  கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல், நடப்பாண்டில் செப்டம்பர் 26ம் தேதி காப்பு கட்டு வைபவத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. திருவிழா காரணமாக தினமும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 

அந்த சமயத்தில், சதுரகிரி மலைப்பாதையில் சாப்டூர் வனச்சரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போதும் முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு  திடீர் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் நவராத்திரியில் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலையில், தற்போது இம்மாத பிரதோஷ, அமாவாசை பூஜைகளுக்கும் பக்தர்களுக்கு அனுமதி  மறுக்கப்பட்டது பக்தர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web