மீண்டும் இந்திய அணியில் தோனி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

 
தோனி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த தோல்வி குறித்து சமூக வலைதளங்களில் பலவிதமான சர்ச்சையான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.  இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவு இந்த உலகக்கோப்பை போட்டியில் செயல்படவில்லை. மேலும் உலகக்கோப்பை போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் இந்தியா வீர்ரகள் சரியாக செயல்படுவதில்லை.

தோனி

இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டபடி வசைபாடி வருகிறார்கள். இந்திய அணி வீரர்கள் தைரியமின்றி தயக்கத்துடன் ஆடியதை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர்.  இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனிக்கு இந்திய அணியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 வடிவிலான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக உள்ளதாக பிசிசிஐ கருதுகிறது.

ஐசிசி

ஐசிசி போட்டிகளில் அந்த அச்சமற்ற பிராண்ட் கிரிக்கெட்டுக்கான திறனைக் கொண்டு வர, டி20 அணியில் தோனியை இயக்குனராக சேர்ப்பது குறித்து பிசிசிஐ-யில் பேசப்பட்டு வருகிறது . கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆலோசகராக தோனி செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், தோனியை டி20 வடிவத்தில் மட்டும் இயக்குனராக ஈடுபடுத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web