சிறுவனின் உயிரை குடித்த அசுத்தமான தண்ணீர்!! 80-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம்!!

 
அசுத்தமான குடிநீர்

சுகாதாரமற்ற தண்ணீரை பருகியதால் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்  ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானின்  கரவுலி மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 80-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.   கரவுலி மாவட்டத்தின் படபடா, கசைபடா, ஷாகஞ்ச் மற்றும் பயானியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 86 பேர் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டனர்.

குடிநீர்

இதுகுறித்து முதன்மை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் புஷ்பேந்திர குப்தா கூறுகையில், "செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 86 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 54 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் குழந்தைகள் வார்டில் 48 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 22 பேர் சிகிச்சையில் உள்ளனர். திங்கள்கிழமை இரவு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட ஷாகஞ்சில் வசிக்கும் 12 வயது சிறுவன் தேவ்குமார், மருத்துவமனைக்குச் வந்த போது உயிரிழந்தார்" என்று கூறினார்.

குடிநீர்

மேலும் இதுத்தொடர்பாக அம்மாவட்ட போலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சுகாதாரமற்ற தண்ணீரை பருகியதால் 80 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுத்தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுத்தமான சுகாதாரமான குடிநீரை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

 

From around the web