அதிருப்தி! பா.ஜ.க. முன்னாள் மந்திரி கட்சியில் இருந்து விலகல்!

 
வியாஸ்

அதிருப்தி காரணமாக குஜராத் மாநிலத்தில், பா.ஜ.க.வில் 32 ஆண்டுகளாக பணியாற்றி வந்த முன்னாள் மந்திரி வியாஸ், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது மேலிட தலைவர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் முன்னாள் மந்திரி மற்றும் மூத்த தலைவராக இருந்து வந்த வியாஸ் பதவி விலக முடிவு செய்து அது குறித்த கடிதத்தினை மாநில பா.ஜ.க. தலைவருக்கு அனுப்பியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திரிபுரா தேர்தல்: எதிர்க்கட்சிகளை துவம்சம் செய்த பாஜக!

இது குறித்து வியாஸ் கூறும்போது, ‘‘அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் சித்பூர் தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக கூறிய அவர், சுயேச்சையாக போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளதால் குழப்பம் நிலவுகிறது.

மேலும் தனது ஆதரவாளர்களை சந்தித்து கலந்து ஆலோசித்து எந்த கட்சி சார்பில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்ய உள்ளேன். படான் மாவட்ட பா.ஜ.க. கமிட்டியின் பணிகள் மகிழ்ச்சியளிக்கவில்லை. மேலும் கட்சியின் தொடர்ந்து ஏமாற்றத்திற்கு ஆளானதாக குற்றம்சாட்டி பதில் அளித்துள்ளார்.

ஒரு மாத காலத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் மூத்த பா.ஜ.க. தலைவர் கட்சியில் இருந்து விலகியது கட்சித் தலைமையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web