குளியல் போட்டுட்டு தான் குற்றவியல் நீதிமன்றம் போகணுமா?

-மகரன்
 
திருச்சி நீதிமன்றம்

ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே பேனும் இருமாய் இருக்குமாம்... திருச்சியில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. லேசான மழை பெய்தாலே திருச்சி நீதிமன்ற வளாகத்துக்குள் உள்ள குற்றவியல் நடுவர் நீதி மன்ற பகுதிக்கு பரிசலில்தான் பயணிக்க வேண்டும் கனமழை என்றால் கேட்கவும் வேண்டுமா ? மழை நீர் தேங்கும் பகுதி என்பதால் வாகனங்கள் செல்ல முடியாத அவல நிலை ஏற்படும். நீதிமன்ற வளாகத்தின் மையத்தில் உள்ள பிள்ளையார் கோயிலை சுற்றிலும் குளம்போல தண்ணீர் தேங்கியிருக்கும். இதைக் கடந்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு செல்ல சாலை வசதி கிடையாது. மண் சாலை தான் உள்ளது. இந்த மண் சாலையும் சேரும் மாறி விடும். இதை கடந்து செல்லும் டூவீலர்கள் சறுக்கி விழுவது வாடிக்கை. 4 சக்கர வாகனங்களின் சக்கரங்கள் சகதியில் சிக்கும். படாத பாடுபட்டு தான் இந்த நீதி மன்றத்துக்கு வேண்டும். 

திருச்சி நீதிமன்றம்

மழையால் குற்றவியல் நடுவர்  நீதிமன்றம் முன்புறம் முழுவதும்  மழைநீர் குளம்போல தேங்கியிருக்கிறது வழக்கறிஞர் முத்து மாணிக்கத்திடம் பேசினோம் அவர் கூறியதாவது குற்றவியல் நீதிமன்றதின் முகப்பு பகுதி பள்ள த்தில் உள்ளது. நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல கட்டடங்கள் ஆங்கிலேயர்காலத்திலேயே கட்டப்பட்டது. 

சமீபத்தில்  இங்கு தார்ச்சாலை அமைத்தார்கள். அடுத்த சில வாரங்களில் இந்த சாலை மாயமாகி மீண்டும் மண்சாலையானது. குற்ற வியல் நீதிமன்றத்துக்கு தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இங்கு சாலை வசதி இல்லை. தேங்கி நிற்கும் மழைநீரால் பகல் நேரத்திலேயே கொசுக்கள் கடிக்கின்றன. கழிவறை வசதி பெயரளவில் மட்டுமே உள்ளது. இதனால், பெண் பணியாளர்கள் பலரும் சிறுநீரக தொற்று ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.

திருச்சி நீதிமன்றம்

அடிப்படை வசதிகளே இல்லாத இந்த நீதிமன்ற கட்டடத்தின் மீது பெரிய நீதிபதிகளின் பார்வை எப்போது விழும் என்றே தெரியவில்லை, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என கோரிக்கை எழுவதும் பின்னர் அடங்கிப்போவது வாடிக்கையான நிகழ்வுதான்.

இன்று திருச்சிக்கு சட்டப்பல்கலைக்கழக விழாவுக்கு வருகை தரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா, திருச்சி  ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய லோக் அலாதத்தை துவக்கி வைக்கிறார். அவர் கண்ணிலாவது இந்த கண்கொள்ளாக்காட்சிபடுகிறா அதன்பின்னராவது தீர்வு ஏற்படுகிறா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web