காருக்குள்ள என்ன இருந்ததுன்னு தெரியுமா? அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பளேர் பதிலடி!

-தீபா
 
அண்ணாமலை செந்தில்பாலாஜி

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, காரில் சிலிண்டர் வெடித்ததில் ஜமேசா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜமேசா முபின் ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைவரா? என கேள்வி எழுப்பிய அவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆளும் திமுக மீது தமிழக  பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.  கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை பலர் சேர்ந்து செய்து இருக்கிறார்கள். ஆனால் முபின் என்று ஒருவர் மீது மட்டுமே குற்றச்சாட்டுகளை அடுக்குவது தவறு என கூறிய அவர், டிஜிபி ஒருவர் மீது மட்டும் குற்றச்சாட்டு வைக்கிறார். அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிக நகைச்சுவையாக  இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

செந்தில்பாலாஜி

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை சம்பவத்தின் தீவிரத்தன்மையை கருதியே முதலமைச்சர் என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைத்தார் என்றும், பிறர் கூறியதால் தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்ற முடிவு செய்ததாக கூறுவது தவறு எனவும் தெரிவித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது எனவும்  விரைந்து விசாரணை முடிக்கப்பட்டு உள்ளது என்றும் ஆனால் ஒரு கட்சி மட்டும் இதில் புகார் வைத்து வருகிறது என்று கூறினார்.    மட்டகரமான அரசியலை இதில் சிலர் செய்து வருகிறார்கள் என்றும், எப்படியாவது இதை அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் செயல்படுகிறார்கள் என அமைச்சர் தெரிவித்தார். 

வேளாண் சட்டங்களுக்கு ஒரு காலம் வரும்: அண்ணாமலை

மதுரையில் ராணுவ வீரரின் மரணத்தை வைத்து அரசியல் செய்தார்களே அவர்கள் யார்? அப்போது அவருடைய ஆடியோ வெளியானதே? அவர்கள் எல்லாம் இதை பற்றி பேசலாமா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அமைச்சர், ஏற்கனவே இதில் விசாரணையை சிறப்பாக செய்து இருக்கிறோம் , அந்த கட்சி இதை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியாதா என்று பார்க்கிறார். நான் மற்றவர்களை மாதிரி சம்பவம் நடந்ததும்  உடனே செய்தியாளர்களை சந்தித்து பொய்யாக பேச முடியாது என கூறினார்.   நான் யுகத்தின் அடிப்படையில் பேச முடியாது என்றும் இந்த கோவை சம்பவத்திற்காக  கடையடைப்பு என்று இவர்கள் அத்துமீறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடையடைப்பு என்று கூறி வியாபாரிகளை அச்சுறுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாகி திட்டவட்டமாக கூறினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web