இதப் பார்றா!! ரூ 37.5 லட்சம் வரிபாக்கி !! கூலித் தொழிலாளிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்!!

 
வருமானவரித்துறை

 

பீகார் மாநிலம் காகரியா மாவட்டம், மகாகுனா கிராமத்தை சேர்ந்தவர் கிரிஷ் யாதவ். தினக்கூலி தொழிலாளியான இவருக்கு சில நாட்கள் முன்பு வருமான வரித்துறையிடம் இருந்து ஒரு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் அவர் பானில் இணைக்கப்பட்ட கணக்கின் வருமானத்திற்கு ரூ. 37.5 லட்சம் பாக்கி செலுத்த உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

வருமானவரித்துறை

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிரிஷ், உடனே தனக்கு அருகில் உள்ள அலாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘நான் டெல்லியில் கூலி தொழில் செய்து வருகிறேன். என்னுடைய ஒரு நாள் வருமானம் ரூ.500. இந்நிலையில், நான் ஒரு மோசடியாளர் என்றும், ரூ.37.5 லட்சம் வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்றும் வருமானத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

டெல்லியில் ஒரு இடைத்தரகர் மூலம் பான் கார்டு பெறுவதற்கு முயற்சித்தேன். அதன் பிறகு இடைத்தரகரை நான் பார்க்கவில்லை. அந்த நோட்டீசில் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் எனக்கு தொடர்பு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நான் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றதே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். 

வருமானவரித்துறை

இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘கிரிஷின் பெயரில் பதிவு செய்யப்பட்ட பான்கார்டு எண்ணுக்கு வருமான வரி நோட்டீஸ் வந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இது ஒரு மோசடி வேலை ஆக கூட இருக்கலாம்.’ என்றார். கூலி தொழிலாளி ஒருவருக்கு ரூ.37.5 லட்சம் வருமன வரி செலுத்தும்படி நோட்டீஸ் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web