இதப் பார்றா!! வைரல் வீடியோ!! பென்ஸ் காரில் ரேஷன் பொருட்கள்!!

 
காரில் ரேஷன் பொருட்கள்


ஒவ்வொரு மாநில அரசும் நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. இவற்றை வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள்  மட்டும்தான் பயன்படுத்தி வருகிறார்களா என்பது குறித்தும், போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்தும் உணவு வழங்கல் துறை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் செயல்பட்டு வரும் ஒரு ரேஷன் கடைக்கு பென்ஸ் காரில் வந்த நபர் பொருட்களை வாங்கி கார் டிக்கியில் அடிக்கி வைத்த காட்சி  வீடியோ வைரலாகியுள்ளது. இதை அங்கிருந்த ஒரு நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பலர் இவ்வளவு வசதியானவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கிறதா? என்று பல்வேறு விதமான விமர்சனங்களையும், கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.



பென்ஸ் காரில் ரேஷன் பொருட்களை வாங்கி சென்ற நபர் அடையாளம் காணப்பட்டு அவரிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அந்த நபர் கூறும்போது, ‘‘எனது உறவினரது கார்தான் இது. இந்த காரை எங்கள் இடத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். டீசல் கார் என்பதால் அடிக்கடி இதை உபயோகப்படுத்தவும் அதன் உரிமையாளர் என்னிடம் சொல்லி இருக்கிறார். எனவே அடிக்கடி இதனை ஓட்டிச் செல்வேன். அவ்வளவுதான். இந்த பக்கமாக வரும்போது ரேஷன் பொருட்களை வாங்கி அவரது காரில் ஏற்றிச் சென்றேன். சிறிய வீடியோகிராபி தொழில் செய்யும் என்னிடம் எனது 2 குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கும் அளவிற்கு கூட பணம் கிடையாது. 2 பேரும் அரசு பள்ளியில்தான் படிக்கிறார்கள்’’ என்று கூறினார்.


எப்படியோ இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்தது சற்று ஆறுதல் அளிக்கிறது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளியோருக்கு அரசு அளிக்கும் மானியங்கள் சென்று சேருகிறதா என்பது குறித்து இன்னும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web