அடுத்த 3 மணி நேரத்திற்கு வீட்டை விட்டு வெளியே போகாதீங்க!!

 
மழை

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன இந்த மழை மேலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளது.இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web