அதிரடியாக குறைந்த தங்கம்!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தங்கம்

அரசன் ஆனாலும், ஆண்டி ஆனாலும் நம்மளிடம் கடுகளவாவது நிச்சயம் தங்கம் இருக்கும். ஏனென்றால் தங்கமானது அந்த அளவிற்கு நம்மளுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் புதிய புதிய ஆபரங்கள் இருந்தாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகமும் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவதும் இல்லை. நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகுக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விருப்பதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துகின்றன.

தங்கம்

சென்னையில் கடந்த சில நாட்களாகவ தங்கம் விலை ஏறவும் இறங்கவுமாக உள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து விற்பனையாவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் குறைந்து, ரூ.4,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ரூ.38,160-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,936-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் குறைந்து, ரூ.3,907-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, ரூ.60,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web