வாகன ஓட்டிகளே உஷார்!! சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!!

 
போக்குவரத்து தடை

ஒவ்வொரு ஆண்டும்  ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் சென்னையில் கோலாகலமாக  கொண்டாடப்பட்டு வருகிறது. 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி  பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன்  இருவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவ ஐயப்பன் மற்றும் வேங்கடப்பன்  ஆகியோரிடமிருந்து தற்போது இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை விலைக்கு வாங்கினர்.

 

போக்குவரத்து

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி அன்று “சென்னை தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நாளை மற்றும் நாளை மறுநாள்  என 2 நாட்களும் சென்னை தினம் கொண்டாட உள்ளது. இத்தினத்தை முன்னிட்டு 2 நாட்கள் பெசன்ட் நகரில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.இதற்காக நாளை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை  பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில்  கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதாவது நாளை மற்றும் நாளை மறுநாள் எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்புவர்கள், 7வது அவென்யுவிற்கும் 6வது அவென்யுவிற்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வருபவர்களும்  16வது குறுக்குத் தெரு வழியாக 2வது அவென்யூவை நோக்கி திருப்பி விடப்படுவார்கள் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து மாற்றம்
இதே போல் 16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது அவென்யூ நோக்கிச் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த வழியில் வருபவர்கள்  3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது அவென்யூ நோக்கி வருபவர்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளில் வருபவர்கள் 3வது மெயின் ரோடு, 2வது அவென்யூ சந்திப்பில் திருப்பி விடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எலியட்ஸ் கடற்கரையில் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூவில் இருந்து 6வது அவென்யூவிற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 4வது மெயின் ரோடு, 5வது அவென்யூ வழியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web