உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்!!

 
துரைசாமி


இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பதவியேற்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றுக் கொண்டார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வர்நாத் பண்டாரியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. அதன்படி அவர்  நேற்று ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழியனுப்பு விழா  நடத்தப்பட்டது. 

சென்னை உயர்நீதிமன்றம்

முனீஸ்வர்நாத் பண்டாரியின் ஓய்வைத் தொடர்ந்து அடுத்த பொறுப்பு தலைமை நீதிபதியா என்பது குறித்து பேச்சு எழுந்தது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை இந்திய ஜனாதிபதி இன்னும் நியமிப்பது குறித்து அறிவிக்கவில்லை.

அதன்படி கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றங்களில் மூத்த நீதிபதிகள் 2 பேரில் ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்நீதிமன்றம்

அதுவரை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதி பதவியை கவனிக்க ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.துரைசாமியை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமிக்க அதிரடி உத்தரவை பிறப்பித்தார். 

அதன்படி இன்று தலைமை நீதிபதி சேம்பரில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து சக நீதிபதிள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள் அனைவரும் புதிய பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web