பசுவதையை நிறுத்தினால் பூமியின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.. நீதிபதி கருத்து !

 
cow

நாடும் முழுவதும் பசுவதை தொடர்பான சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. சில அமைப்பினர் பசுவதை என்ற பெயரில் அப்பாவி மக்களையும், இளைஞர்களின் கொடூரமாக தாக்கும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. உத்தரபிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மாடுகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு அழைத்து செல்வோரை 'பசு கடத்தல்காரர்கள்' எனக் கூறி தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இது தொடர்பான பல வீடியோக்கள் வெளியாகி அதிர்வை உண்டாக்கி உள்ளது.

fdg

இந்த நிலையில், பசுக்களை சட்ட விரோதமாக கடத்திய வழக்கு குஜராத்தில் உள்ள தபி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம் சாட்டபட்ட நபருக்கு ஆயுள் தண்டனையை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த வழக்கில் தீர்ப்பை அளித்த நீதிபதி சில கருத்துக்களையும் கூறினார். அதில், பசுவதையை நிறுத்தினால் பூமியில் உள்ள அனைத்து பிரச்சினகளும் தீர்ந்து விடும். பசுவின் சாணத்தால் கட்டப்படும் வீடுகள் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டால் கூட பாதிப்பு அடையாது. தீர்க்க முடியாத பல நோய்களுக்கு பசுவின் சிறுநீர் அருமருந்தாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார். 

இந்த தகவலை லைவ் லா இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தானது நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.

ஏனெனில், இதற்கான அறிவியல் பூர்வ சான்றுகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web