தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்து மூதாட்டி பலி: போலீசார் விசாரணை..!!

 
மூதாட்டி பலி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரை கிணறு அருகே உள்ளது பெரிய கிணறு.  இந்த  பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு   வருகின்றது.   இதன்  மதிப்பு  ஒரு லட்ச ரூபாய் . கடந்த சில தினங்களாக முன்பு  தொட்டியின்  கட்டுமான பணிகள்  முழுமையாக  நடைபெறுவதற்கு  முன்பே தண்ணீர் தொட்டில் நீரை நிரப்பி  உள்ளனர். இந்நிலையில்  தற்போது  அந்த பகுதியில்  ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது .

அதில்  அந்த  கிராமத்தை  சேர்ந்த  சுமார்  40க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்அப்போது  பாப்பாத்தி  என்ற மூதாட்டி  தண்ணீர் குடிப்பதற்காக  தண்ணீர் தொட்டி  அருகே சென்று  நீரை பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.  

அப்போது  சற்றும்  எதிர்பாராத  விதமாக  தரமற்ற முறையில் கட்டப்பட்ட  தண்ணீர்  தொட்டி  இடிந்து மூதாட்டி  பாப்பம்மாள்  மீது விழுந்துள்ளதுஇதில்  பாப்பம்மாள்  சம்பா இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார்மேலும்  அவருடன் தண்ணீர் பிடிக்க  சென்ற மற்றோரு நபர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

பின்னர்  அவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர்இது குறித்து  வேதனை  தெரிவித்துள்ள அப்பகுதி  மக்கள்  தரமற்ற முறையில் கட்டப்பட்ட நீர் தொட்டியால்தான்  விபத்து நிகழ்ந்தது.  இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அவர்கள்  அரசுக்கு  கோரிக்கை  விடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து  தகவலறிந்து  வந்த  பட்டி  காவல்  துறையினர்  வழக்கு  பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

From around the web