தேர்தல் முதல் மதிப்பெண்! மாணவியை தலைமையாசிரியராக்கி அழகு பார்த்த பள்ளி முதல்வர்!

 
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்

தேர்தவில் அதிக மதிப்பெண் பெற்றதால், ஒரு நாள் பள்ளி தலைமையாசிரியையாக்கி அழகு பார்த்த பள்ளி முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. விழுப்புரம் அரசு  மகளிர் மாதிரி மேல் நிலைப் பள்ளியில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியை சசிகலா, 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவிக்கு சர்ப்ரைஸான பரிசு காத்திருக்கிறது என்று பள்ளியின் இறை  வணக்க கூட்டத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 12ம் வகுப்பு காலாண்டு தேர்வில் 600க்கு 581 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக எஸ்.லோகிதா தேர்ச்சி பெற்றார்.

நேற்று, மாணவி லோகிதாவை, தலைமையாசிரியை சசிகலாவும், பிற ஆசிரியர்களும் ஒன்றிணைந்து தலைமையாசிரியை இருக்கையில் அமர வைத்து மாணவிக்கு கிரீடம் சூட்டி அழகு பார்த்தனர். 

தேர்வு

தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்ட மாணவி லோகிதா ஒவ்வொரு வகுப்பறையாக சென்று கண்காணித்து, அதன் பின்னர் சத்துணவு மையத்துக்கு சென்றார். அங்கே மாணவிகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த மதிய உணவை சாப்பிட்டு, அதன் தரத்தை பரிசோதித்தார். 

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் வகுப்புகளுக்கு செல்கின்றனரா என்று சரி பார்த்தார். பின்னர், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். ஒரு நாள் முழுவதும் தலைமை ஆசிரியராக தனக்கு செயல்பட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய மாணவி லோகிதாவை தலைமையாசிரியர் உட்பட அனைவரும் பாராட்டினார்கள். 

விழுப்புரம்

பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலா இது குறித்து கூறுகையில், வெறும் புத்தக கல்வி மட்டுமே மாணவிகளின் எதிர்காலத்திற்கு பயன்படாது. கல்வியுடன் அவர்களின் தனித் திறன்களையும், தலைமைப் பண்பையும் வளர்த்துக் கொள்வது அவசியம் என்பதற்காகவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன்  மூலமாக அவர்களின் தன்னமபிக்கை அதிகரிக்கும். தயங்கி நிற்கிற பிற மாணவிகளும் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் வெளியே வருவார்கள். அடுத்த வாரத்தில், காலாண்டு தேர்வில் 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுகின்ற மாணவிக்கும் சர்ப்ரைஸ் பரிசு காத்திருக்கிறது என்று மாணவிகளை உற்சாகப்படுத்துகிறார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web