இன்று மின்சார சட்டமசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்!!

 
மின்சாரம்

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்  ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 32 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் 14 மசோதாக்கள் முழு வடிவம் பெற்றுள்ளன. 

பாராளுமன்றம்

இந்நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மின்துறை அமைச்சர் ஆர்கே சிங் தாக்கல் செய்யவுள்ளார். மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

மின்சாரம்

இதனிடையே இம்மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மின்வாரிய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் நாளன்று, மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தம் செய்வார்கள் என மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web