மலைக்கோட்டையில் யானைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்!! பக்தர்கள் பரவசம்!!

 
யானை

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சியின்  முக்கிய அடையாளமாக திகழ்கிறது மலைக்கோட்டை.  மலைப்பாறை மீது கட்டப்பட்ட இந்த கோட்டை,  நடுவில் ஒரு மலையும், அதனை சுற்றி கோட்டையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. இந்த மலை ஏறத்தாழ 3,400 மில்லியன் வருடங்கள் பழமையானது.  178 படிகள் ஏறினால்  ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்  அடிவாரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைய 417 படிகள் ஏற வேண்டும். மலைக்கோட்டையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலைக்கு கீழே மாணிக்க விநாயகர் கோயில், மேலே உச்சிப்பிள்ளையார் கோயில், இடையே தாயுமானவர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
இந்த மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால் விநாயகர் போலும்,  வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போலும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல்  போலும்,  சிவலிங்கம் போலும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் காளை போலவும் காட்சி அளிக்கும். 

இத்தனை சிறப்பு வாய்ந்த  மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சாமி திருக்கோவில் யானை லட்சுமிக்கு இன்று 32வது பிறந்தநாள். இந்த பிறந்தநாள் விழா கோவிலில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.  மாணிக்க விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 

யானை
உதவி ஆணைய செயலாளர்  திரு ஹரிஹரசுப்பிரமணியன் அவர்களால்  யானைக்கு இனிப்பு மற்றும்  பழங்கள் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்கள் இந்நிகழ்வை கண்டு பரவசம் அடைந்தனர். அவர்களும் யானைக்கு இனிப்புக்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web