நெகிழ்ச்சி மாமியார்!! 35 வயது மகனை தத்தெடுத்து மருமகளுக்கு மறுமணம்!!

 
மித்தல்

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் கடுவா பட்டிடார் சமூகத்தை சேர்ந்தவர் ஈஷ்வர்பாய் பிமானி. இவரது மகன் சச்சின் (35). இவருக்கு மித்தல் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், பால் கறக்கும் மின்கருவி மூலம் சச்சின், தன் வீட்டு தொழுவத்தில் பால் கறந்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தால் இவரது மொத்த குடும்பமும் நிலைகுலையானது.

திருமணம்

இந்த சம்பவத்துக்குப் பிறகு மிகவும் பாதிக்கப்பட்டார் சச்சினின் மனைவி மித்தல். கணவர் சச்சினின் இழப்பு குறித்து மித்தல் கூறுகையில், “எங்களுக்கு 2010-ல் திருமணம் நடந்தது. 2012-ல் தான் எங்கள் முதல் குழந்தை த்யான் பிறந்தான். 12 ஆண்டுகள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ்ந்தோம். நானும் சச்சினும் தினமும் கால்நடைகளுக்கு தீவனம் வைப்போம். அதே மாதிரிதான் அன்றும் வேலைகளை முடித்துவிட்டு பால்கறந்து கொண்டிருந்போது திடீரென ஷாக் அடித்து கீழே விழுந்து உயிரிழந்தார். அந்த சமயத்தில் என்னால எதுவுமே செய்ய முடியவில்லை” என்று உடைந்து அழுகிறார்.

இந்த நிலையில், தன் மாமியாருடனும் குழந்தைகளுடன் தன் மீத வாழ்வைக் கழிக்க முடிவு செய்த மருமகள் மித்தலுக்கு, மாமியார் ஈஷ்வர்பாய் ஒரு மகனை தத்தெடுத்து என் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்து என் குடும்பத்தின் நிலையை பழையபடிக்கு கொண்டுவர முடிவு செய்தார். ஆரம்பத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்த மித்தல், பின்னர் ஒப்புக்கொண்டார். அதன்பிறகு, 35 வயதான யோகேஷ் தத்தெடுக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தத்தெடுப்பு நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த கிராமமும் திரண்டிருந்தது. காரணம், மகளை திருமணத்துக்குப் பின் வழியனுப்பும் நிகழ்வு போல, தங்கள் ஊரின் மகனை வழியனுப்ப அவ்வளவு பேரும் திரண்டிருந்தனர். இறுதியில் யோகேஷின் பெற்றோர் சம்மதத்துடன் நெற்றியில் திலகமிட்டு தன் மகனாக யோகேஷை  ஈஷ்வர்பாய் ஏற்றுக்கொண்டார்.சொந்த ஊருக்கு திரும்பி வந்த பிறகு, கங்காபர் கிராமத்தில் இருந்த லக்ஷ்மிநாராயணன் கோவிலில் யோகேஷுக்கும் மித்தலுக்கும் திருமணம் நடைபெற்றது. 

இதுகுறித்து மித்தலின் புதிய கணவர் கூறுகையில், “கல்யாணத்துக்கு பிறகு, மித்தலோடு நான் அங்கேயே தங்க வேண்டும் என்று கூறினார்கள். 35 வயதுக்கு பிறகு இதெல்லாம் சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றியது. ஆனால், மித்தலையும் அவரது குடும்பத்தையும் சந்தித்த பிறகுதான், அந்த குடும்பத்துக்கு ஒரு மகன் இப்போது எவ்வளவு அவசியம் என்று உணர்ந்து கொண்டேன்” என்றார்.மகன் இறந்த பிறகு மொத்த குடும்பமும் சோகத்தில் முழ்கியிருந்த நிலையில், இன்னொரு மகனை தத்தெடுத்து தன் மருமகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார் மாமியர் ஈஷ்வர்பாய் பிமானி.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web