அதிர்ச்சி! ட்விட்டரில் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா! பூட்டப்படும் அலுவலகங்கள்!

 
ட்விட்டர்

சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள நிறுவனம்  ட்விட்டர். இதனை எலான் மஸ்க் விலை கொடுத்து வாங்கியுள்ளார். அவர் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு, அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார். ட்விட்டர் அதிக லாபத்தை ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய திட்டங்களையும் செயல்படுத்த தொடங்கியுள்ளார். அந்த வகையில் ப்ளூ டிக்கிற்கு கட்டணம் நிர்ணயித்த எலான் மஸ்க் தற்போது ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும்  எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்

இதனால் ட்விட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பணி அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை இரவு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார். இந்த மின்னஞ்சலில் ட்விட்டர் வெற்றிபெற நாம் இன்னும் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு தயாராகுங்கள்  அல்லது மூன்று மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என அனுப்பியுள்ளார்.

எலான் மஸ்க்கின் இந்த செயல் ஊழியர்களிடையே பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவர்கள் முடிவெடுக்க ஒருநாள் மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. எலான் மஸ்க்கின் இறுதி எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான ட்விட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே ட்விட்டரில் உள்ள பல முக்கியமான குழுக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மற்ற சில குழுக்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தன. இது நிறுவனத்தை மீட்டெடுக்க இயலாத அபாயத்தில் தள்ளியுள்ளதாக ட்விட்டர் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  மேலும் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தை நாசப்படுத்தும் முயற்சியிலும் இறங்கக் கூடும் என தலைமைக்குழு அச்சம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் ட்விட்டர் அலுவலகங்களையும் மஸ்க் தற்போது மூடியுள்ளார். ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்த பிறகு செயல்படும் அலுவலகங்கள் பூட்டப்பட்டு வருகின்றன

ட்விட்டர் புதிய தேவை

 நவம்பர் 21ம் தேதி முதல் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எலான் மஸ்க் ட்விட்டருக்கு புதிய தலைமையை தேடிக் கொண்டிருக்கிறார். மஸ்க் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றக்கூடிய ஒரு தலைமையை எதிர்பார்த்து வருகிறார். ட்விட்டரின் அமைப்பை சீக்கிரம் மறுசீரமைத்து விட்டு டெஸ்லாவில் தன்னுடைய நேரத்தை செலவழிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web