பரபரப்பு! பள்ளி விடுதியில் மேலும் ஒரு +2 மாணவி தற்கொலை! பெற்றோர் போராட்டம்! கண்டுக்கொள்ளாத பள்ளிக் கல்வித் துறை!

 
சரளா

தமிழகத்தில் அடுத்தடுத்து பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் மனநலன் சார்ந்த பிரச்சனைகளைக் களைவதற்கு பள்ளிக் கல்வித்துறை எந்த முயற்சியையும் எடுக்கவில்லை என்பது பெற்றோர்களின் குமுறலாக இருக்கிறது. இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் விடுதியில் சரளா என்கிற +2 பயிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம். இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு சரளா (17) என்ற மகள் உள்ளார். இவர் திருவள்ளூவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். 

தற்கொலை

சரளா இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதன் பின்னர் சக நண்பர்கள் உணவு அருந்த சென்று விட்ட நிலையில், தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் போலீசார் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அப்பள்ளி மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியின் மரண செய்தியைக் கேட்டு, அலறியடித்துக் கொண்டு பள்ளிக்கு வந்த பெற்றோர், உறவினர்கள் திடீரென பள்ளிக்கு முன்பு போராட்டம் செய்ய தொடங்கினார்கள். அசம்பாவிதங்களைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் திருத்தணி - கீழச்சேரி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.  மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை உடனடியாக சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web