சூப்பர்!! தமிழகம் முழுவதும் இவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு!!

 
பள்ளிக்கல்வித்துறை

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று பல்வேறு உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் பல குழந்தைகள் தங்களின் பெற்றோர்களை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன.

கொரோனா

இந்நிலையில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து தனியார் பள்ளிகளில் படித்து வரும் பிள்ளைகள் கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தனியார் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கொரோனா தொற்று காரணமாக பலியாக இருந்தால், அவர்களின் கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா

இந்த அறிவிப்பால் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.பெற்றோர்களை இழந்து வாடும் நிலையில் கல்விக்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு பல்வேறு தரப்பினர் இடையே பெரும் வரவேற்பையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web