வெடித்து சிதறிய ராக்கெட்!! விபரீதத்தில் முடிந்த அறிவியல் கண்காட்சி!! அதிர்ச்சி வீடியோ!!

 
அறிவியல் கண்காட்சி

பள்ளி கல்லூரிகளில் பொதுவாக மாணவர்களின் கல்வி மற்றும் அரிவு திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால்   கல்லூரியில் ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் வெடித்ததில் மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்டில் நிகழ்ந்துள்ளது.


ஜார்க்கண்ட் மாநிலம் கட்ஸில்லா என்ற பகுதியில் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ - மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். அப்போது அங்கு பயிலும் ஒரு மாணவியும் - மாணவனும் தாங்கள் கண்டுபிடித்த ராக்கெட் ஒன்றை அனைவரது முன்பும் காட்சிப்படுத்தினர். மேலும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கினர். அப்போது அவர்களை சுற்றி சக மாணவர்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர்.


அந்த சமயத்தில் ராக்கெட்டின் கேபிளை ஒன்றாக சேர்ந்தபோது, திடீரென அந்த ராக்கெட் வெடித்தது. இந்த வெடி சம்பவத்தில் அந்த மாணவர்கள் உட்பட அருகில் சுற்றி வேடிக்கை பார்த்த சக மாணவர்கள் என மொத்தம் 11 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.   மேலும் இது குறித்து காவல்துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே ராக்கெட் வெடித்தது தொடர்பான வீடியோ   தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

From around the web