நடுவானில் வெடித்து சிதறும்.. சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! பதறிய அதிகாரிகள்!

 
விமான நிலையம்

நடுவானத்துல பறக்கும் போது, விமானம் வெடித்து சிதறும் என்று  மர்ம நபர் ஒருவர் நேற்றைய தினம் இ-மெயில்  மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன.  இதனால் விமான நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படும். இந்நிலையில், சென்னை விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையக இ-மெயில் முகவரிக்கு மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் அனுப்பி இருந்தார்.

விமான நிலையம்

அந்த இ-மெயிலில், "பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் நபர் ஒருவர் விமானத்தில் செல்ல உள்ளார். அப்போது விமானம் வெடித்து சிதறும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதைக் கண்டதும் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  மேலும் போலியாக இ-மெயில் ஐ.டி.யை உருவாக்கி அதில் இருந்து அனுப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.  

இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், பயங்கரவாதிகளை கண்காணிக்கும் கியூ பிரிவு போலீசார், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு அவசர தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து டெல்லியில் உள்ள விமான நிலைய ஆணையக அதிகாரிகளுக்கும் தகவல் தரப்பட்டது.

நாளை முதல் மதுரை துபாய் விமான சேவை!

பின்னர் சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதையடுத்து ஆய்வு செய்ததில் வெளிநாடு செல்லும் பயணி ஒருவரை தடுத்து நிறுத்துவதற்காக வந்த மெயிலாக இருக்கலாம் என்று தெரிய வந்தது. எனினும் சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் பயணிக்க வரும் பயணிகள், கார் பார்க்கிங் உள்பட அனைத்து பகுதிகளிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமான பயணிகளுக்கு வழக்கமாக 3 அடுக்கு சோதனைகள் நடைபெறும். நேற்று கூடுதலாக,மேலும் ஒரு சோதனை நடத்தப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web