வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

 
பணம்

தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் 10 ஏ படிவத்தை மறுதாக்கல் செய்து வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் 25ம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருகிற பணத்திற்கும், உதவிகளுக்கும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961 பிரிவு 12 ஏபி/80ஜி/10(23சி)/35(1) யின் கீழ் பதிவு/ அங்கீகாரம் பெறுவதில் நிதி சட்டம் 2020 மற்றும் 2021 புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.
இந்த புதிய நடைமுறைகளின் படி, வருமான வரிச்சட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவாகியுள்ள அறக்கட்டளைகள்  இந்த வருடம் மார்ச் 31ம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாக மின்னணு வழியே 10ஏ படிவத்தைக் கட்டாயம் தாக்கல் செய்து, மறு பதிவு செய்திருக்க வேண்டும். 

tax சொத்து நில வரி காலி மனை

அதன் படி தாக்கல் செய்து, மறுபதிவு செய்ய தவறிய அறக்கட்டளைகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கும் வரி விலக்கு ரத்து செய்யப்படலாம். இந்த புதிய நடைமுறைகளுக்கு மாறுவதில் உள்ள சில இடைஞ்சல்கள் காரணமாக பல அறக்கட்டளைகள்  மார்ச்ச் 31ம் தேதிக்குள் 10ஏ படிவத்தைத் தாக்கல் செய்ய இயலவில்லை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

அறக்கட்டளைகளின் நியாயமான இன்னல்களைக் கருத்தில் கொண்டு, மத்திய நேரடி வரி வாரியம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி படிவம் 10ஏ தாக்கல் செய்ய வசதியாக இம்மாதம் 25ம் தேதி வரையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

வரி வாரியத்தின் சுற்றறிக்கையின் படி மறுபதிவு செய்ய தவறிய அறக்கட்டளைகள் 25ம் தேதிக்குள் மின்னணு வழியில் 10 ஏ படிவத்தைத் தாக்கல் செய்யும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web