பிபா உலககோப்பை கால்பந்து திருவிழா…! ரசிகர்கள் உற்சாகம்…

 
உலககோப்பை கால்பந்து

நான்கு வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி வருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் உலக அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழாவாகும். உலக கோப்பை கால்பந்து கடைசிப் போட்டி ரஷ்யாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பிரான்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

உலககோப்பை கால்பந்து

இந்நிலையில், நான்கு வருடங்களுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் 20ம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இப்போட்டியில், பிரான்ஸ், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.  2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் 20-ந்தேதி தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.  கத்தார் கால்பந்தின் மிகப்பெரிய போட்டியை நடத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் முதல் நாடாகும். 1963-ம் ஆண்டு பிபாவின் அங்கீகாரம் பெற்ற கத்தார், ஒருமுறை கூட கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றதே இல்லை. இந்த முறை போட்டிகளை நடத்துவதால் முதல் முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் நுழையும் வாய்ப்பை பெற்றுள்ளது.

உலககோப்பை கால்பந்து

கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் வரும் 20-ம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல் பேத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வேடார் அணியை எதிர்கொள்கிறது. 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.3258 கோடி பரிசு தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

From around the web