மயக்கமருந்து தராமல் 23 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு!! கதறி துடித்த இளம்பெண்கள்!!

 
அறுவை சிகிச்சை

பீகார் தலைநகர் பாட்னாவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் 23 பெண்களுக்கு மயக்க மருந்து எதுவுமே கொடுக்காமல் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக திடுக்கிடும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவமனை மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலாளருக்கு தேசிய பெண்கள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.இந்த புகாரில் நவம்பர் 16ம் தேதி புதன்கிழமை ஒரு பெண் தனக்கு மயக்க மருந்தே அளிக்கப்படாமல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாக புகார் அளித்தார்.

அறுவை சிகிச்சை

அவரை போல ஏற்கனவே 30 பெண்களுக்கு இந்த முறையிலேயே அறுவை சிகிச்சை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.  அதில் பல பெண்கள் வலியில் கதறிய சப்தம் கேட்டு பீதியடைந்து 7 பேர் மருத்துவமனையை விட்டே ஓட்டம் பிடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் பிரதிமா செய்திக்குறிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதில்  "நாங்கள் வலியில் கதறிய போது, எங்கள் கை, கால்களை மருத்துவமனை ஊழியர்களும், உதவியாளர்களும் பிடித்துக்கொண்டனர். சத்தம் எழுப்பக்கூடாது ” என தெரிவித்துள்ளார். இந்த அலட்சிய செயல் குறித்து எதிர்ப்பு குரல்கள் எழுந்த நிலையில், அம்மருத்துவமனையின் தலைமை மருத்துவர்  இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

அறுவை சிகிச்சை

மேலும் அவர் இச்சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான ந்தக் குரூரச் சம்பவத்திற்கு காரணமான என்.ஜி.ஓ அமைப்பிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில் அந்த என்.ஜி.ஓ மனிதத்தன்மையற்ற செயலில் ஈடுபட்டது  உறுதி செய்யப்பட்டுள்ளது” என அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார். 2012ல்   அராரியா மாவட்டத்தில் 53 பெண்களுக்கு மயக்க மருந்து அளிக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இதில் தொடர்புடைய  3 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!

From around the web