சந்திரமுகி 2 படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை!! ஜோதிகா இடத்தில் இவரா.?

 
கங்கனா ரணாவத்

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. இதில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.   அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் சத்திரமுகி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. 'சந்திரமுகி' இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

கங்கனா ரணாவத்

அதன்படி, பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.   இந்த படத்தின் இரண்டாம் பாகம் சுமார் 17 வருடங்களுக்கு பின் மீண்டும் உயிர் பெற உள்ள நிலையில், இப்படத்தில் லாரன்ஸ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், மேலும் வடிவேலு ராதிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


ஏற்கனவே இந்த படத்தில் நடிகை மஹிமா நம்பியார்,  லட்சுமிமேனன், போன்ற நடிகைகள் நடிக்க உள்ள   நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த இவர் தமிழில் தமிழில் தாம்தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

From around the web