பிரபல பாலிவுட் இயக்குநர் சவான்குமார் தக் உயிரிழப்பு!! அதிர்ச்சியில் திரையுலகம்!!

 
சவான்குமார் தக்

1967-ம் ஆண்டு சஞ்சீவ் குமார் நடித்த ‘நௌனிஹால்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக சாவன் குமார் தக் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார். இப்படம் தேசிய வருதுக்கு பரிந்துரைக்கபட்டது. அதனைத் தொடர்ந்து, 1972-ம் ஆண்டு மீனா குமாரியின் கடைசிப் படமான ‘கோமதி கே கினாரே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

சவான் குமார் தக்

இதையடுத்து, சௌதென், சனம் பெவாஃபா, ஹவாஸ், கோம்தி கே கினாரே, சாஜன் பினா சுஹாகன் போன்ற படங்களை சவான் குமார் தக் இயக்கி உள்ளார். மேலும் தான் இயக்கிய படங்களில் மிகவும் பிரபலமான சில பாடல்களை எழுதியுள்ளார்.86 வயதான சவான் குமார் தக் ஏற்கனவே நுரையீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் நுரையீரல் கோளாறு காரணமாக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உள்ள ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயம் சீராக செயல்படவில்லை என்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

rip

இதய செயலிழப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இயக்குநர் சவான் குமார் தக் மறைவுக்கு நடிகர் சல்மான் கான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “என் அன்பான சவான் ஜி, நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள். நான் எப்போதும் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web