பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

 
பிலிப்ஸ்

பிரபல ஹாலிவுட்  திரைப்பட நடிகர் லெஸ்லி பிலிப்ஸ் காலமானார். 1924ம் ஆண்டு வடக்கு லண்டனின் டோட்டன்ஹாம் பகுதியில் லெஸ்லி பிலிப்ஸ் பிறந்தார். 50களில் திரைப்பட உலகில் நுழைந்த பிலிப்ஸ், கேரி ஆன் எனப்படும் சீரிஸில் நடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தந்தது. தொடர்ந்து, டாக்டர் இன் தி ஹவுஸ் என்ற நகைச்சுவை சீரிஸில் நடித்து தனக்கென தனியே ரசிகர் பட்டாளத்தை பெற்றார் பிலிப்ஸ். அதன் பிறகு ஜேகே ரவுலிங் எழுதி வெளியான ஹாரி பாட்டர் நாவல் திரைப்படமாகியது. இதில், வரும் மாயாஜால தொப்பிக்கு இவர் குரல் கொடுத்திருந்தார். 

பிலிப்ஸ்

கரகரப்பும், கேலியும் நிறைந்த மந்திர தொப்பியின் குரல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பிலிப்ஸ் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசியுள்ள அவரது மனைவி ஸாரா, 'நான் எனது அன்பான கணவரை இழந்து விட்டேன். பொதுமக்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த நடிகரை இழந்துள்ளனர். அவர் மிகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

பிலிப்ஸ் இதுவரையில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி பல கதாப்பாத்திரங்களுக்கு குரல் கொடுத்தும், தொலைக்காட்சி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்திருக்கிறார். அவருடைய மரணம் ஹாலிவுட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web