பிரபல இந்திய கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம்! கர்நாடக கிரிக்கெட் வீரர் அர்ஜூனை மணக்கிறார்!

 
கிரிக்கெட் வேதா

பிரபல இந்திய  கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி,  கர்நாடக கிரிக்கெட் வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவின் காதலை ஏற்று, தனது திருமணத்தை உறுதி செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நடைப்பெற்ற நிச்சயதார்த்தத்தையும் உறுதி செய்துள்ளார். 

இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக வீரர் அர்ஜுன் ஹொய்சாலாவுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதை இவர்கள் இருவரும், தங்களது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலமாக தெரிவித்துள்ளனர். 

கிரிக்கெட் வேதா கிருஷ்ணமூர்த்தி

வேதா, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 48 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 76 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  ஹொய்சாலா ரஞ்சி கோப்பையில் கர்நாடகா அணிக்காக விளையாடி வருகிறார். இவர்களது திருமண செய்தி, கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஹொய்சலா, வேதாவுடனான திருமணத்தை, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், ‘யெஸ்.. அவள் ஆம்’ என்று சம்மதித்தாள் என கவித்துவமாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் வீராங்கனை வேதா, கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2020 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற அணியில் விளையாடியுள்ளார். 

கடந்த மார்ச் 8, 2020ல் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு வேதா எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவர் கடைசியாக 2018ல் நாக்பூரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியில் இடம்பெற்று விளையாடினார். சமீபத்தில், பர்மிங்காமில் 2022 காமன்வெல்த் போட்டிகளுக்கு கிரிக்கெட் நிபுணராக பங்காற்றினார். அதே சமயம் ஹொய்சலா, கர்நாடகாவுக்காக ஒரு முறை ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web