பிரபல மலையாள நடிகை, பாடகி கொச்சின் அம்மினி காலமானார்!

 
அம்மினி

பிரபல மலையாள திரைப்பட நடிகை கொச்சின் அம்மினி கடந்த நவம்பர் 7ம் தேதி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1942ல் பிறந்த கொச்சின் அம்மினி, தனது 12 வயதில் நாடகங்களில் நடிக்க துவங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள கொச்சின் அம்மினி, பாடல்களும் பாடி இருக்கிறார். 

'கண்டம் பச்ச கோடி' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான கொச்சின் அம்மினி, தொடர்ந்து ஆதிமிகள், சரஸ்வதி, சுவிமரர் பாகயா, உன்னிர்ச்சா, வர்வேமயம், கண்ணூர் டீலக்ஸ், அஞ்சு சுந்தரிகள், இருளும் கலயம் போன்ற படங்களில் நடித்துள்ளார். 

அம்மினி

2011ல், 'தி ஹண்டர்' படத்தில் நஸ்ருதீன் ஷாவின் அம்மாவாக நடித்தார். பின்னர் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். 'மஞ்சில் விரிஞ்சபூகலி' படத்தில் பூர்ணிமா ஜெயராமுக்கு குரல் கொடுத்த இவர், சாரதா, கே.ஆர்.விஜயா, விஜயநிர்மா ஆகியோருக்கு ஆஸ்தான பின்னணி குரல் கலைஞராக இருந்தார். 1967ல் வெளியான 'இந்துலேகா' படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார். சங்கீத நாடக அகாடமி விருது, திக்குறிச்சி நினைவு விருது, ஓ.மாதவன் விருது, ஸ்வரலயா, சர்கா மற்றும் காளிதாச கலகேந்திர பிரதிபா வந்தனா விருது, ஸ்ரீ கிருஷ்ண நாட்டிய சங்கீத அகாடமி விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 

அம்மினி

இந்நிலையில், நடிகை கொச்சின் அம்மினிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நவம்பர் 7ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web